மகளை டாக்டராக்கிய ஏழைத் தாய் - வாழ்த்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறை திருக்கடையூரில் மீன்களை கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை டாக்டராக்கிய ரமணி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.;

Update:2022-05-31 14:57 IST

சென்னை,

மயிலாடுதுறை மாவட்டம் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளார். அவரது கணவர் 24ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்தநிலையில் குடும்பத்தை நடத்த மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன் கறியை கழுவி சுத்தம் செய்யும் கூலி வேலைக்கு வேலையை செய்து வருகிறார் . அப்படி செய்து கிடைத்த பணத்தில் மகளை படிக்க வைத்து வந்துள்ளார். இவரது மகன் ரவிச்சந்திரன் ரத்தநாள சுரப்பி குறைபாடு காரணத்தினால் பத்தாவதுக்கு மேல் படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இவரது மகள் தொடர்ந்து படித்து வந்துள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியர் சேர்ந்துள்ளார்.

ஆனாலும் மகளின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று, ரமணி அவரை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்துள்ளார். அதன் விளைவாக ரஷ்யாவில் மகள் விஜயலட்சுமி மருத்துவம் படித்து திரும்பியுள்ளார். இருப்பினும் அவர் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற அங்கீகாரத்திற்கான தேர்வு எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் 8 மணி நேரம் தொடர்ந்து மீன்களை கழுவி கூலி வேலை பார்த்து அதில் கிடைத்த பணத்தில் மகளை மருத்துவராக இருக்கும் ஒரு தாயின் விடா முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மீன்களை கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து , தனது மகளை மருத்துவம் படிக்க வைத்த ரமணி மற்றும் அவரது மகள் டாக்டர் விஜயலட்சுமி, சகோதரர் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது மயிலாடுதுறை கலெக்டர் லலிதா உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்