ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-08-11 19:36 GMT

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி வடக்குமாதவி சாலையில் உள்ள சவுபாக்கிய விநாயகர் கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் கொளக்காநத்தம் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக மகரிஷிகளின் அருளை பெறவேண்டி சிறப்பு ஹோமம் நடந்தது. காண்டரிஷி சிறப்பு ஹோமம் மற்றும் பூணூல் மாற்றும் நிகழ்ச்சியை லால்குடி மாந்துறை ராமகிருஷ்ணன் சாஸ்திரி நடத்தி வைத்தார். இதில் ரிக், யஜூர் வேதங்களை பின்பற்றும் பிராமணர்கள் கலந்துகொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர். ஆவணி அவிட்டத்தை தொடர்ந்து காயத்ரி ஜெப வழிபாடு அந்தணர் வீடுகளில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி சவுபாக்கிய விநாயகருக்கு உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. இதேபோல் பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சார்பில் ஆவணி அவிட்டத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்