ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
சங்கராபுரம் அருகே ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிராமணர்கள், ஆரிய வைஸ்யர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து பழைய பூணூலை மாற்றிக்கொண்டு புதிய பூணூல் அணிந்துகொண்டனர். பின்னர் அவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். இதே போல் குளத்தூர், காட்டுவன்னஞ்சூர், மூக்கனூர் உள்ளிட்ட இடங்களிலும் பூணுல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.