பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ெபரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா இன்று நடக்கிறது.

Update: 2023-03-20 19:14 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,


ஸ்ரீவில்லிபுத்தூர் ெபரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா இன்று நடக்கிறது.

மாரியம்மன் ேகாவில்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசை அன்று பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேேபால இந்த ஆண்டு கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. மதியம் 1:15 மணிக்கு பூக்குழி திருவிழா தொடங்குகிறது. கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் மஞ்சள் ஆடை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதிப்பார்கள்.

இந்த ஆண்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிக்க உள்ளனர். இந்த தீமிதி திருவிழாவை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் பக்தர்கள் வந்து செல்ல அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ் வசதிகளை செய்துள்ளது.

போக்குவரத்து மாற்றம்

நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டு சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தீயணைப்பு துறை வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பூக்குழி திருவிழாைவ முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சத்திய நாராயணன் செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்