ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூச்சாண்டி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று பூச்சாண்டி சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Update: 2023-08-28 19:12 GMT

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று பூச்சாண்டி சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

பவித்ர உற்சவம்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் நேற்று முன் தினம் தொடங்கியது.

உற்சவத்தின் முதல் நாள் யாகசாலையில் நம்பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 2-வது நாளான நேற்று பூச்சாண்டிசேவை எனப்படும் அங்கோபாங்க சேவை நடைபெற்றது. பூச்சாண்டிசேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பவித்ர உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

நெல்லளவு

7-ம் நாளான வருகிற 2-ந் தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுகிறார். உற்சவத்தின் 9-ம் நாளான 4-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்