பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

Update: 2023-01-09 19:25 GMT

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகள் மூலம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 267 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஆலம்பாடி சமத்துவபுரத்தில் உள்ள அமராவதி அங்காடியில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வழங்கப்பட்ட டோக்கன் முறையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

சுழற்சி முறையில்

வருகிற 13-ந் தேதி வரை தினமும் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் சுழற்சி முறையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு ஏதுவாக டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டு, பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்