பொங்கல் பண்டிகை: குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை...!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

Update: 2023-01-13 04:47 GMT

கிருஷ்ணகிரி,

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படும் மாட்டு பொங்கல் பண்டிகையன்று மக்கள் தங்கள் வீடுகளில் இறைச்சி சமைப்பது வழக்கம். மாட்டு பொங்கல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆட்டுச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள ஆட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வழக்கம் ஆட்டு சந்தை கூடியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அதில் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனா். அதிகபட்சமாக ஒரு ஜோடி ஆடு ரூ.60 ஆயிரம் வரை விற்பனையானது.

பொங்கல் பண்டிகையையொட்டி குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. சுமார் ரூ.8 கோடி வரை ஆடு விற்பனை நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்