போளூர்
போளூர் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள் தலைமை தாங்கினார். துணை தலைவர் மிஸ்ஸியம்மாள் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பி.ஏ.வேலு வரவேற்றார்.
கூட்டத்தில் கேளூர் சந்தை மேட்டில் ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நிழற்கூடம் அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் அருள் நன்றி கூறினார்.