கும்பகோணம், பட்டுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து கும்பகோணம், பட்டுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-13 20:51 GMT

கும்பகோணம்,மார்ச்.14-

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து கும்பகோணம், பட்டுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து கும்பகோணத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாநகர பகுதி செயலர் ராமநாதன், ராஜூ, பத்மகுமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் ராம்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலர் அழகு த. சின்னையன், சோழபுரம் பேரூர் செயலாளர் ஆசாத்அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சி.வி.சேகர் தலைமை தாங்கினாா்.அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பி. என்.ராமச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மலைஅய்யன், மாவட்ட எம்.ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர் சுபராஜேந்திரன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் பாரதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனா். 

Tags:    

மேலும் செய்திகள்