அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணல்ேமடு அருகே மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-12 17:06 GMT

மணல்மேடு;

மணல்ேமடு அருகே மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மதுக்கடையை திறக்க எதிர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கடைவீதியில் புதிதாக மதுக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மணல்மேடு கடைவீதியில் புதிதாக மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. போக்குவரத்து நிறைந்த அப்பகுதியில் மதுபானக்கடையை திறக்க பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர், வன்னியர் சங்கம், வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மணல்மேட்டில் வன்னியர் சங்க மாநில துணை செயலாளர் பாக்கம் சக்திவேல் தலைமையில் மதுக்கடை திறப்பதாக இருந்த இடத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

ஆா்ப்பாட்டத்தில் பா.ம.க. சார்பில் மாவட்ட தலைவர் லண்டன் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் காசி.பாஸ்கரன், மாவட்ட அமைப்புச் செயலாளர் தங்க.செந்தில்நாதன், ஒன்றிய செயலாளர் மதிவாணன், அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் தொல்காப்பியன், பேரூராட்சி உறுப்பினர்கள் மதன், பாண்டியன், பா.ஜனதா சார்பில் குஜேந்திரன், தங்க.குணசேகரன், தமிழ்வாணன், நாம் தமிழர் கட்சி சார்பில் தாழை வரதராஜன், வர்த்தக சங்க பொறுப்பாளர் ஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அவர்களிடம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் தையல்நாயகி, கோட்ட கலால் அலுவலர் ஹரிதரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், இப்பிரச்சினை தொடர்பாக மயிலாடுதுறை தாசில்தாா் அலுவலகத்தில் விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அதுவரை மதுபானக்கடையை திறப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்