அழகுமுத்துக்கோன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

பாளையங்கோட்டையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-07-11 20:53 GMT

பாளையங்கோட்டையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரன் அழகுமுத்துகோன்

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா நேற்று ெகாண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மேயர் சரவணன், ஞானதிரவியம் எம்.பி., சுப.சீத்தாராமன், முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், மாநகர செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். துணை மேயர் ராஜூ, மத்திய மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மண்டல தலைவர் பிரான்சிஸ், ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க

நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், துணை செயலாளர் நாராயணபெருமாள், இளைஞர் அணி செயலாளர் பால்துரை, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், அந்தோணி அமலராஜா, பகுதி செயலாளர் திருத்து சின்னதுரை, கவுன்சிலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அ.தி.மு.க. வட்ட செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மதிய உணவை தச்சை கணேசராஜா வழங்கி தொடங்கி வைத்தார்.

இதுபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆவின் அண்ணாச்சாமி, ரமேஷ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ்

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட துணை தலைவர் மாரியப்பன், பொருளாளர் ராஜேஷ்முருகன், பொதுக்குழு உறுப்பினர் கவி பாண்டியன், மண்டல தலைவர் முகமது அனஸ் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் செயற்குழு உறுப்பினர் மகாராஜன், தொகுதி பொறுப்பாளர் நீலமுரளி யாதவ், மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் முத்து பலவேசம், வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், வெங்கடாஜலபதி உள்பட பலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.வினர் நிர்வாகி கல்லத்தியான் தலைமையிலும், தே.மு.தி.க.வினர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையிலும், சமத்துவ மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையிலும், நாம் தமிழர் கட்சியினர் நிர்வாகி சத்யா தலைமையிலும், இந்து மகா சபையினர் தலைவர் இசக்கிராஜா தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டியன், பகுதி செயலாளர்கள் முத்து, செல்வ குமரன்உள்பட பலர் கலந்து கொண்டனர். புல்லட் ராஜா தலைமையில் இளைஞர்கள் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மறியலுக்கு முயற்சி

யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன் யாதவ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட யாதவர் பண்பாட்டு கழக தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு யாதவ மகாசபை இளைஞரணி பொதுச் செயலாளர் பொட்டல் துரையாதவ் தலைமையில் இளைஞர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது சில வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய முயன்றனர். இதனால் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் அனிதா பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

யாதவ முன்னேற்ற சங்கத்தினர் தலைவர் சங்கரன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் நாகராஜன், நிர்வாகி செந்தில்வேல் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தமிழ்நாடு யாதவ மகா சபை மாவட்ட தலைவர் முத்துராமன், செயலாளர் சுபாஷ், பொருளாளர் சண்முகவேல் தாஸ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் பல்வேறு அமைப்பினர் இளைஞர்கள் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா தலைமையில் உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர்கள் வாசிவம், ஹரிஹரன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்