விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி:கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு 2 ஆண்டு ஜெயில்;கோபி கோர்ட்டு தீர்ப்பு
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலியான வழக்கில் கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கடத்தூர்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலியான வழக்கில் கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
நம்பியூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரகாசம் (வயது 55). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி அத்தாணியில் இருந்து நம்பியூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார்.
கோபி அருகே உள்ள சவுண்டப்பூர் ஏரி மேடு வளைவில் சென்றபோது எதிரே கல்லூரி மாணவர்களான அத்தாணியை சேர்ந்த அருண் பிரணவ் (26), கோவை அப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கவுதம் சித்தா (27) ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டு இருந்தனர்.
2 ஆண்டு ஜெயில்
கண்இமைக்கும் நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசின் மோட்டார்சைக்கிளும், கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி மாணவர்கள் அருண்பிரனவ், கவுதம் சித்தா ஆகியோர் மீது கோபி முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடைபெற்று வந்த நிலையில்
இந்த வழக்கில் நேற்று மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி தீர்ப்பு கூறினார். அதில் விபத்தை ஏற்படுத்தியதாக அருண்பிரனவ், கவுதம் சித்தா இருவருக்கும் தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.