சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
பண்ருட்டி அருகே சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
பண்ருட்டி
பண்ருட்டி அருகே உள்ள மேல்காங்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் ஜெயபால்(வயது 23). இவர் முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவரிடம் நெருங்கி பழகி உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜெயபால் மீது இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்.