கோவில்களில் போலீசார் பாதுகாப்பு
கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சமயபுரம்:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ந் தேதி நாடு முழுவதும் உள்ள கோவில்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி நேற்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் அறிவுரையின்படி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் சமயபுரம் மாரியம்மன் கோவில், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல், மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மேற்பார்வையில் திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில், திருவெள்ளறை பெருமாள் கோவில், மண்ணச்சநல்லூர் கடைவீதி, பஸ் பணிமனை உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.