பா.ஜனதா நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

Update: 2024-02-06 17:24 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற11-ந்தேதி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனிடையே பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் அண்ணாமலையின் "என் மண், என் மக்கள்" பாதயாத்திரை 200 சட்ட மன்ற தொகுதிகளில் நிறைவு செய்ததின் அடையாளமாக பா.ஜனதா சார்பில் நடைபயணம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பா.ஜனதா நடைபயணத்திற்கு போலீசார் அனுமதியளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதன்படி செயின் ஜார்ஜ் பள்ளியில் பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் யாத்திரை சென்று, பொதுக்கூட்ட மேடைக்கு செல்ல பா.ஜனதா திட்டமிட்ட நிலையில் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்