போலீசார் தேசியக்கொடி ஏந்தி பேரணி

தூத்துக்குடியில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி போலீசார் தேசிய கொடியேந்தி பேரணி சென்றனர்.

Update: 2022-08-13 17:09 GMT

தூத்துக்குடியில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி போலீசார் தேசிய கொடியேந்தி பேரணி சென்றனர்.

தேசியக் கொடி பேரணி

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினவிழா கொண்டாடுவதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தேசிய கொடியேந்தி பேரணி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பிருந்து பேரணியாக புறப்பட்டு குரூஸ்பர்னாந்து சிலை அருகில் வந்து முடிவடைந்தது. இதில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுடலைமுத்து, மயிலேறும் பெருமாள், அய்யப்பன், ரபி சுஜின் ஜோஸ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

காவல்துறை வாகனங்கள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்துறையில் பயன்பாட்டில் உள்ள 4 சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காவல்துறை வாகன ஓட்டுநர்களிடம் வாகனங்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார். குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சரிசெய்ய ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுடலைமுத்துவுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய இருசக்கர வாகன ரோந்து காவலர்களுக்கு இரவு நேரத்தில் பயன்படுத்துவதற்கு பவுச்சுடன் கூடிய டார்ச் லைட்டுகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்திஸ், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்