விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் திடீர் சோதனை

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் திடீர் சோதனை செய்தனா்.

Update: 2023-02-13 18:45 GMT


விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம், காணை, கல்பட்டு, விக்கிரவாண்டி, செஞ்சி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெருங்குளம், இந்திலி, ரிஷிவந்தியம், சிறுபாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு விவசாயிகளிடம் எடைக்கு அதிகப்படியான விலை கேட்கிறார்களா? என்று கேட்டறிந்து விசாரித்தனர். மேலும் நெல் கொள்முதல் முறையாக நடைபெறுகிறதா என்றும் ஏதேனும் முறைகேடு நடந்தால் அதுபற்றிய புகார்களை உடனடியாக தெரிவிக்கும்படியும் விவசாயிகளிடம் போலீசார் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்