ெதன்காசியில் போலீஸ் அணிவகுப்பு
தென்காசியில் நேற்று திடீரென போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
தென்காசி:
தென்காசி கூலக்கடை பஜாரில் நேற்று திடீரென போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்துக்கு தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் அரிப்புகார தெரு, மவுண்ட் ரோடு, சுவாமி சன்னதி பஜார் வழியாக வந்து காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் முன்பு முடிவடைந்தது. கோவையில் பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்பட்டதால் தென்காசியில் முன்னெச்சரிக்கையாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.