போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆய்வு

தென்காசிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழா நடைபெறும் மைதானத்தை போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆய்வு செய்தார்

Update: 2022-12-05 18:45 GMT

தென்காசி:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி தென்காசியில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று மாலை தென்காசி வந்தார். தென்காசி ெரயில் நிலையத்தை அவர் பார்வையிட்டார். பின்னர் முதல்-அமைச்சர் செல்லும் பாதை வழியாக குற்றாலம் சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கு தங்கும் அறையை பார்த்துவிட்டு தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசையில் விழா நடைபெறும் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், துணை சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், வேல்கனி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்