பட்டாசுக்கடை வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்

பட்டாசுக்கடை வியாபாரிகளுடன் போலீசார் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தினர்.

Update: 2022-10-21 17:49 GMT

ஆரணி

பட்டாசுக்கடை வியாபாரிகளுடன் போலீசார் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தினர்.விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது சம்பந்தமாக பட்டாசு வியாபாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் பங்கேற்று வியாபாரிகளிடத்தில் பேசுகையில், பட்டாசுக்கடை நடத்த தடையின்மை சான்று கோரி விண்ணப்பம் பெறப்படும்போது, அத்துடன் பட்டாசுக்கடை அமைய உள்ள இடத்தின் தற்காலிக வரைபடம் பெறப்பட வேண்டும், வரைபடத்தில் கட்டிட உரிமையாளர் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம் பெறப்பட வேண்டும். வெடிப்பொருட்கள் அல்லது மத்தாப்பு வகை பட்டாசுகளை உரிமை வழங்கும் அலுவலர்களால் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மேல் அதிகமாக இருப்பு வைத்து விற்பனை செய்யக்கூடாது, பட்டாசு விற்பனை செய்வதற்கான கட்டிடம் செங்கல் கற்களால் அல்லது கான்கிரீட்டால் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஒரு பட்டாசுக்கடைக்கும் மற்றொரு பட்டாசுக்கடைக்கும் இடையே 15 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும், குறைந்தது 200 லிட்டர் தண்ணீர் பேரல் 2, 4 தீ வாளிகளில் மணல், தீ பாதுகாப்புக்கான உரிய முறையில் பயன்படுத்தப்படும் வகையிலான பயிற்சி பெற்ற பொறுப்பான 2 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்க வேண்டும், என்றார்/

Tags:    

மேலும் செய்திகள்