படிப்பில் தன் மகளை முந்திய மாணவன் - சக மாணவியின் பெற்றோர் செய்த பகீர் சம்பவம்

தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்ல முயன்றதாக மாணவியின் தாயார் மீது புகார் அளிக்கப்பட்டது.

Update: 2022-09-03 11:40 GMT

காரைக்கால்,

காரைக்காலில் தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்ல முயன்றதாக பெண் மீது புகார் அளிக்கப்பட்டது. குளிர்பானத்தை குடித்த நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் 2 வது மகன் பால மணிகண்டன், அங்குள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவத்தன்று ஆண்டு விழா ஒத்திகையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய சிறுவனுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. என்னவென்று விசாரித்த போது பள்ளியின் காவலாளி குளிர்பானம் கொடுத்ததாக கூறவே, உடனே பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்த போது மாணவனுடன் படிக்கும் சக மாணவியின் பெற்றோர் குளிர்பானம் தருவது பதிவாகி இருந்தது. தன் மகளை விட படிப்பில் பால மணிகண்டன் சிறந்தவராக இருந்ததால் பொறாமையில் சகாயராணி விக்டோரியா என்ற பெண் இந்த செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில் சகாயராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்