பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2023-08-27 18:30 GMT

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனியார் கல்லூரி, பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில் ஒன்றிணைவோம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் அந்த பிரிவின் போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசுகையில், சக மாணவர்களிடம் சகோதரத்துவத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். மேலும் தீண்டாமை, சாதிய பாகுபாடுகள், இரட்டை குவளை முறை மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதாபிமான மிக்க சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில் மாணவர்களாகிய நீங்கள் தான் சாதிய முரண்களை பற்றி எடுத்துரைத்து தீண்டாமையை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்த சமூகத்தில் அனைவரும் சமம் என்பதையும் ஒவ்வொருவரும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாய மாற்றத்தை தனி நபரின் மாற்றத்தாலேயே உறுதி செய்ய முடியும் என்பதையும், இம்மாற்றத்தை மாணவர்களாகிய நீங்கள் தான் கொண்டு வர வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் மனித நேயத்தை வளர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்