போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் நகை பறித்தவர் கைது - 25 பவுன் நகைகள் பறிமுதல்

போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் நகை பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-08 15:55 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கடந்த மாதம் பெண் என்ஜினீயரிடம் போலீஸ் என்று கூறி 10 பவுன் நகையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றார்.

இதேபோல மற்றொரு நபரிடம் போலீஸ் என்று கூறி நகைகளை வாங்கி சென்ற சம்பவமும் நடந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் ஓட்டேரி போலீசில் நடந்த சம்பவங்களை பற்றி புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் போலீஸ் என்று கூறிய நபர் யார் என்பது அடையாளம் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் என்று கூறி நகை பறித்த வழக்கில் கடலூர் மாவட்டம் சின்ன காப்பான் குளம் கிராமத்தை சேர்ந்த சிவராமன் (வயது 40), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 25 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்