நாமக்கல்லில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நற்சான்றிதழ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்

நாமக்கல்லில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நற்சான்றிதழ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்

Update: 2022-11-07 18:45 GMT

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமை தாங்கி குற்ற தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் போலீசார் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

இதை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்