பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் மயில், மான், காட்டுப்பன்றி உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீா் கிடைக்காததால், குடியிருப்பு பகுதிகளுக்கும், விளை நிலங்களுக்கும் சென்று அவ்வப்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவையூர் அருகே நேற்று காலை 4 வயது பெண் புள்ளிமான் சாலையைக் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்த மானை கைப்பற்றி கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தனர்.