செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த பாமக நகர செயலாளர் நாகராஜை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந் செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து உறவினர்கள், கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்டோர் கூடியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாகராஜனின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பிரேத பரிசோதனை செய்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.