வனத்துறையை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்

வனத்துறையை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-20 18:12 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகத்தில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், காட்டுபன்றிகள், குரங்குகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன.வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள நிலங்களுக்குள் யானைகள் காட்டு பன்றிகள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து ஏராளமாக பயிர்களை நாசம் செய்து வருகிறது, சிறுத்தைகள் ஆடு, மாடுகளை கொன்று வருகிறது.

குறிப்பாக சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, மோடிகுப்பம், கல்லப்பாடி கதிர்குளம், ராமாபுரம், டி.பி.பாளையம், வி.டி.பாளையம், பூசாரிவலசை, பரதராமி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பயிர்களை தொடர்ந்து வனவிலங்குகள் நாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்கு விரட்டாத வனத்துறையை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக குடியாத்தம் வனச்சரக அலுவலகம் முன்பாக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ாட்டாளி உழவர் பேரியக்க தலைவர் முரளி, செயலாளர் பலராமன், மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சரவணன், இந்திராகாந்தி, நகர செயலாளர்கள் ரமேஷ், குமார், ஒன்றிய செயலாளர்கள் பிரதாப், அரவிந்தன், அசோக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து வனச்சரக அலுவலர் வினோபாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளை வராமல் தடுக்க மின்வேலி அமைத்து பயிர்களை காக்க வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை உடனடியாக பெற்று தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

முடிவில் மாவட்ட பொருளாளர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்