பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

பிளஸ்-2 மாணவிக்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-11-27 13:03 IST

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் கிராமம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49). இவர் கட்டிட தொழிலாளி. இவரது மகள் கீர்த்தனா (17). கீர்த்தனா காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கீர்த்தனா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. அதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் உடல் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

அவரது பெற்றோர் வேலைக்கு சென்று மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு மகளுக்கு போன் செய்தனர். போன்னை எடுக்காத நிலையில் ஜன்னல் வழியாக பார்த்தபோது கீர்த்தனா மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இறந்த கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து பிளஸ்-2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பதை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்