பாரம்பரிய முறையில் சம்பா சாகுபடிக்கு உழவு பணி

பாரம்பரிய முறையில் சம்பா சாகுபடிக்கு உழவு பணி நடந்தது.

Update: 2022-08-21 18:32 GMT

நச்சலூர் பகுதியில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் தங்களது வயலில் உழவு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் நெய்தலூர், கோட்டைமேடு பகுதியில் ஒரு வயலில் விவசாயி கண்ணாயிரம் (வயது55). இவர் பாரம்பரிய முறையில் தனது எருமை மாடுகள் மூலம் உழவு பணி செய்துவருகிறார்.இது குறித்து விவசாயி கண்ணாயிரம் கூறுகையில்:- முன்னோர்கள் காலத்தில் எருமை மாடுகளை வைத்து உழவு பணியில் ஈடுப்பட்டு வந்தனர். பின்னர் எருதுகளை வைத்து உழவு பணியில் செய்து வந்தனர். தற்போது நவீன காலம் என்பதால் டிராக்டர் மற்றும் பவர்டில்லர் மூலம் உழவு பணி செய்து வருகின்றனர். முன்னோர்கள் செய்த பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் வகையில் நான் வீட்டில் வளர்கும் கிடாரி எருமை மாடுகளை வைத்து ஆண்டுதோறும் உழவு பணியில் ஈடுபடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் என்னைப்போல் மற்ற விவசாயிகளும் பாரம்பரியத்தை பின்பற்றி எருமை மாடுகளை வைத்து உழவு பணி செய்ய வேண்டும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்