மகாலட்சுமி அம்மன் கோவிலில் உழவாரப்பணி
மகாலட்சுமி அம்மன் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19-ந்தேதி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இதையடுத்து நேற்று லாலாபேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் ஒன்றிணைந்து கோவில் வளாகத்தை சுத்தப்படுத்தி உழவாரப்பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.