பசுமாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்

பசுமாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2023-06-22 19:45 GMT

குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. அவை திறந்தவெளியில் வீசப்படுவதால் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் தீவனத்தோடு சேர்த்து தின்று வருகின்றன. இதனால் அவைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் குன்னூர் அருகே கோடேரி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு சமீபத்தில் சிறுத்தைப்புலி தாக்கி உயிரிழந்தது. அந்த பசுமாட்டின் உடலை கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அதன் வயிற்றில் 25 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இது சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்