தி.மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர்.

Update: 2024-11-15 21:18 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அந்தவகையில் ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமியையொட்டி நேற்று அதிகாலை 5.40 மணி அளவில் தொடங்கி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.33 மணி அளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர்.

மாலை 4 மணிக்கு மேல் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தரிசனத்திற்கு வரிசையில் சென்ற பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது. பவுர்ணமி இன்று அதிகாலை வரையில் இருந்ததால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்