எருமப்பட்டியில்30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Update: 2022-12-21 18:45 GMT

எருமப்பட்டி:

எருமப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கடை, ஓட்டல்கள், பேக்கரிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? விற்கப்படுகிறதா? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் குணசேகரன் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.3,200 அபராதம் வசூலிக்கப்பட்டதோடு 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதல், விற்றல் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. சோதனையின்போது எருமப்பட்டி பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுரேஷ் ராஜ் மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உடன சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்