100 வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
டிசம்பருக்குள் 100 வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாநிலக்கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறி இருப்பதாவது;
"முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, தொழிலாளர் நலன் & திறன் மேம்பாட்டுத்துறை - வேலைவாய்ப்பு & பயிற்சித்துறை சார்பில் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அதில், முதலாவது முகாமை சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று தொடங்கி வைத்தோம்.
மேலும், நம் திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, சிறிதும், பெரிதுமாக 2,400 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரமாவது பணி ஆணையை வழங்கினோம்.
தமிழ்நாடு முழுவதும் நடக்கவிருக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயனடைய என் அன்பும், வாழ்த்தும்." இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.