நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) தவிர்க்க முடியாத அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.எச்.காலனி, கல்லுக்குழி, ரேஸ்கோஸ் ரோடு, கேசவ நகர், காஜா நகர், சுப்பிரமணியபுரம், மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, இ.பி.காலனி, காஜாமலை, தர்காசாலை (கலெக்டர் பங்களா) உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
இதேபோல் எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் டி.எஸ்.பி. கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதி மின்நகர், எடமலைப்பட்டிபுதூா், ராஜீவ்காந்திநகர், பஞ்சப்பூர், செட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்சி மன்னார்புரம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., சோழமாநகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, குண்டூர், மலைக்கோவில், கூத்தைப்பார் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது என்று திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) பா.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.