பில்லூர் 3-வது திட்ட குடிநீர் வினியோகம்: அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கி வைக்கிறார்

பில்லூர் 3-வது கூட்டுக்குடி நீர் திட்டம் கோவை மாநக ராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Update: 2024-02-11 01:49 GMT

கோவை,

கோவை மாநகரில் 2035-ம் ஆண்டுக்கான மக்கள் தேவையை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோகத்துக்காக ரூ.780 கோடி மதிப்பில் பில்லூர் 3-வது கூட்டுக்குடி நீர் திட்டம் கோவை மாநக ராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானியாற்றை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பில்லூர் 3-வது திட்டத்துக்காக முருகையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பில் தலைமை நீரேற்று நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூருக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தண்டிப்பெருமாள் புரத்தில் ரூ.104.90 கோடி மதிப்பில் 178 எம்.எல்.டி. திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.இங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டன்மலைக்கு தண்ணீர் செல்கிறது. அங்கு 900 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் அமைக்கப்பட்டு, பன்னிமடைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.இத்திட்டத்தில் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

.கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் இதற்கான விழா நடக்கிறது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பங்கேற்று பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்