மக்காச்சோள பயிரை சேதப்படுத்திய பன்றிகள்

சாத்தூர் அருகே மக்காச்சோள பயிரை பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Update: 2022-11-06 19:05 GMT

சாத்தூர், 

சாத்தூர் அருகே மக்காச்சோள பயிரை பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

காட்டு பன்றிகள்

சாத்தூர் அருகே சூரங்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த வேலி முள் காட்டுக்குள் காட்டு பன்றிகள் வசித்து வருகின்றன. இதனை சுற்றி உள்ள ஒத்தையால், ஸ்ரீரெங்காபுரம், ஒ.மேட்டுப்பட்டி, கண்மாய்சூரங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களுக்குள் பன்றிகள் புகுந்து சேதப்படுத்துகின்றன.

இதனால் இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் பன்றிகளுக்கு பயந்து சாகுபடி செய்வதற்கு பயப்படுகின்றனர்.

மக்காச்சோளம் சேதம்

ஓ மேட்டுப்பட்டி கிராமத்தில் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட பகுதிகளில் 80 ஏக்கர் அளவில் மக்காசோளம் பயிரை பன்றிகள் சேதப்படுத்தி உள்ளது இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

பன்றிகளுக்கு பயந்து விவசாயிகள் நாள் முழுவதும் வயல்களில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதலால் சூரங்குடி கண்மாய் பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி அங்கு உள்ள வனவிலங்குகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்