தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மறியல்

தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்கக்கோரி அய்யம்பேட்டை அருகே பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-06 20:44 GMT

அய்யம்பேட்டை:

தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்கக்கோரி அய்யம்பேட்டை அருகே பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி

தஞ்சை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணிக்காக பண்டாரவாடையில் இருந்து சரபோஜிராஜபுரம் வரை சாலைகளை பெயர்த்து ஒரு மாதம் ஆகியும், அப்படியே கிடைக்கிறது. இதனால் சாலையில் புழுதி காற்றில் பறக்கிறது.

இதன் காரணமாக சாலையோரங்களில் வசித்து வரும் பொதுமக்களும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுகிறது.

சாலை மறியல்

எனவே பண்டாரவாடையில் இருந்து பசுபதிகோவில் வரை நெடுஞ்சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி அய்யம்பேட்டை அருகே ரெகுநாதபுரம் பகுதியில் பொதுமக்கள் நேற்று காலை திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலை மறியலால் தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்