கும்பகோணம்;
புதுடெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு 10-ந் தேதி(திங்கட்கிழமை) தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னை செல்லும் சோழன் ெரயிலில், சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பழ.அன்புமணி, மாவட்ட செயலாளர் பி.எம்.இளங்கோவன், தஞ்சாவூர் மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்க தலைவர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் உள்பட 37 பேர் புறப்பட்டு சென்றனர்.