மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி- கமல்ஹாசனுக்கு அழைப்பு
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வருகிற 28-ந்தேதி அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.
சென்னை,
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வருகிற 28-ந்தேதி அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு இன்று கமல்ஹாசனிடம் நேரில் வழங்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மேயர் பிரியா உடன் இருந்தார்.