பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: பாஜக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் - அண்ணாமலை
தொடண்டர்கள் யாரும் எதையும் கையில் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை,
கோவை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபியின் அறிவிப்பை வரவேற்கிறேன். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
சொல்வதோடு நிறுத்தி விடாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாஜக நிச்சயம் உதவும்.
நம்முடைய தொடண்டர்கள் யாரும் எதையும் கையில் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும். பாஜகவின் வளர்ச்சியை தமிழகத்தில் சீர்குலைக்க முடியாது.
மாநில அரசுக்கு மறுபடியும் வலியுறுத்துகிறேன், தொண்டர்களின் அமைத்தி, எங்களுடைய பேச்சு ஒரு எல்லைக்குதான். இதேபோன்று தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் தொண்டர்களின் கோபத்துக்கு மாநில அரசு ஆளாக வேண்டியிருக்கும்.
ஆரம்பத்தில் காவல்துறை சுணக்கமாக இருந்தாலும் கூட தற்போது போலீசார் சுதாரித்து கொண்டதாக தெரிகின்றது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.