நிலத்திற்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு

நிலத்திற்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-07-04 19:12 GMT

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், தேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு 16.9.2006-ல் 2 ஏக்கர் நிலம் பேரூர் கிராமத்தில் 4 பேருக்கும், குடிசல் கிராமத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 6 பேருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிலம் வழங்கப்பட்ட நாளில் இருந்து நிலத்தை சிறிது சிறிதாக சீரமைத்து மரக்கன்றுகள் நட்டு நிலம் சீர்திருத்தம் செய்து விவசாயம் செய்ய கடுமையாக உழைத்து, கடன் வாங்கி செலவு செய்து பராமரித்தனர். இந்த நிலத்திற்கு 2014-ம் ஆண்டு வரை முறையாக நிலவரி செலுத்தி ரசீது வாங்கியுள்ளனர். அதன்பிறகு நிலவரி செலுத்த சென்றால் உங்கள் நிலத்தை அரசு முடக்கி வைத்துள்ளது. அதனால் சாலை வரி செலுத்த முடியாது என்று கூறுகின்றனர். கணினி சிட்டாவில் பெயர்கள் வரவில்லை. இது சம்பந்தமாக மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பதிலும் இல்லை. எனவே மாவட்ட கலெக்டர், அந்த நிலத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்