பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குமார் தலைமை தாங்கி, ெபாதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.
இதில் பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் அளித்த மனுவில், எனது நிலத்தில் 6 பனை மரங்கள் இருந்தன. இந்நிலையில் சிலர் அந்த மரங்களை வெட்டியுள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பனை மரங்களை வெட்டக்கூடாது என்று அரசு வலியுறுத்துகிறது. ஆனால் அதை மீறி பனை மரங்களை வெட்டியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.