கைலாசா நாட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி முதியவர் மனு
ஆக்கிரமிப்பை அகற்றாததால் கைலாசா நாட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மனு கொடுக்க புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் வந்தார்.
அப்போது அவர் அளித்துள்ள மனுவில், கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததை கண்டித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனால் தான் இங்கு வசிக்க விரும்பவில்லை எனவும், நித்யானந்தாவின் கைலாசா நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு மனுவில் கூறியிருந்தார்.