நாம் தமிழர்கட்சியினர் முருகன் வேடமணிந்து மனு

நாம் தமிழர்கட்சியினர் முருகன் வேடமணிந்து மனு கொடுத்தனர்.

Update: 2022-07-04 17:28 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்ட நாம்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கண்இளங்கோ, தமிழ் மீட்சி பாசறை செயலாளர் கோபால் உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்க்கடவுள் முருகன் வேடமணிந்து வந்து மனு கொடுத் தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 1957-ம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டத்திற்கு எதிராகவும், ஐகோர்ட்டு உத்தரவிற்கு எதிராகவும் வர்த்தக நிறுவனங்களில், தனியார் அலுவலகங்களின் பெயர்பலகைகளில் தமிழ் மொழி இல்லாத நிலை உள்ளது. இதனை கண்டறிந்து தடுக்க வேண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேற்று மொழியில் உள்ள பெயர்பலகைகளை அகற்றிவிட்டு தமிழ் மொழியில் பெயர்பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்