பெருங்குளம் மாயக்கூத்தர் கோவிலில் கும்பாபிஷேகம்
பெருங்குளம் மாயக்கூத்தர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில் நவதிருப்பதி ஸ்தலத்தில் 6-வது ஸ்தலமாகும். இந்தக் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் திருமஞ்சனம், யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி நடந்தது. காலை 9.30 மணிக்கு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பினர். இதில் ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமிகள், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் லோகநாயகி, ஸ்தலத்தார்கள் சீனிவாசன் ராமானுஜம், ஸ்ரீதர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.