மண்பாண்டங்கள் செய்ய மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படும் - தூத்துக்குடி கலெக்டர்

மண்பாண்டம் செய்யும் தொழில் மேலும் ஊக்குவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-15 09:26 GMT

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீலமுடிமன் கிராமத்தில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில் இன்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரடியாக ஆய்வு செய்தார்.

அப்போது மண்பாண்டங்கள் செய்யும் விற்பனை கூடத்தில் உள்ள மண் அடுப்புகளை கையில் எடுத்து பார்த்தார். மேலும், மண் பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் கூறியதாவது.

மண்பாண்டங்கள் செய்வதற்கு மண் எடுப்பதற்கு உரிய அனுமதி வழங்கப்படும். மண்பாண்டம் செய்யும் தொழில் மேலும் ஊக்குவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசின் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்