பெரியார் பல்கலைக்கழக தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது - யு.ஜி. சி. அறிவிப்பு
பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.
சேலம்,
சேலத்தில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது. மேலும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் எனவும் யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம் முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி, ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ளது.