பெரியார் நினைவு தினம்
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பெரியார் நினைவு தினம்
நாமக்கல் அண்ணா சிலை அருகே கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் வணங்காமுடி வரவேற்றார். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மாநில துணை செயலாளர் பாலு, நாமக்கல் ஒன்றிய செயலாளர் கவுதமன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் பிரியதர்ஷினி, முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்
இதேபோல் ராசிபுரம் அருகே தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்தனூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், பேரூர் செயலாளர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சின்னசாமி, பேரூராட்சி அவை தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் விஜயன், கட்சி நிர்வாகிகள் மணி, கணபதி, சின்னுசாமி, கவுன்சிலர்கள் முத்துசாமி, ரேவதி, கிருத்திகா, அன்பரசி, ஜெயக்கொடி, நிர்வாகிகள் சினனுசாமி, ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திருச்செங்கோடு
அதேபோல் பெரியாரின் நினைவு நாளையொட்டி திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறுமொளசியில் உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், ஒன்றிய தி.மு.க. செயலாளர் அட்மா சேர்மன் தங்கவேல் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.
நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மயில்சாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மாவட்ட தலைவர் சேன்யோ குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் கே.கே.கணேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார், ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணை பொதுச்செயலாளர் செல்வ வில்லாளன் தமிழரசு, திருச்செங்கோடு ஒன்றிய குழு துணை தலைவர் ராஜவேல், மாநில மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் திருநங்கை ரியா, எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சோழ பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.