பெரம்பலூர் கடைவீதியில் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் கடைவீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-13 19:30 GMT

பெரம்பலூர் கடைவீதிக்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் கடைவீதி சாலைக்கு கார், இரு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு பொருட்களை வாங்க சென்று விடுவதால், அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் ஆம்புலன்சுகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்